அன்புள்ள ஜெ ,
முக்கியமானதை சொல்லாமல் விட்டு விட்டேன் , கிருஷ்ணன் அஸ்தினபுரிக்கு சென்றது அரசனாக இல்லாமல் . ஒருவன் அரச அந்தஸ்து இழந்தவனெனில் அவனை மக்கள் எங்கனம் காணுவார்கள் என்பதை சொல்லவுமே, கிருஷ்ணர் மக்கள் தன்னை எதிர்கொண்ட விதத்தை பாண்டவர்களிடம் எடுத்துரைக்கிறார் .
இன்னொன்று கிருஷ்ணர் தனது அரச அந்தஸ்த்தை விட்டது , பாண்டவர்களுக்கு இணையாக ஆகும் பொருட்டு , நம்மை விட ஒருவர் மேல் இடத்தில் இருப்பின் , அவர் நம் எவ்வளவு மீது அன்பு கொண்டாலும் அவருடன் ஒன்றுவது மனதளவில் கடினம் . கிருஷ்ணன் தனது அரச அந்தஸ்தை விடுவதன் வழியாக , அரச அந்தஸ்து இல்லாத பாண்டவர்களிடம் இணக்கமாவது எளிது .
அன்பு ,உறவு , குரு அந்தஸ்து எல்லாமும் இருந்தாலும் கூட படிநிலைகளில் ஏற்றத்தாழ்வு இருப்பெனில் அது மனதை கண்டிப்பாக தொந்தரவு செய்யும் , இந்த இயல்புதான் ஒருவரை மேல் நகர்த்துவது .
கிருஷ்ணனின் விருப்பம் தன் சார்ந்ததல்ல , தன் நோக்கம் சார்ந்தது , எனவே தன் நோக்கம் சார்ந்து தன் நிலையை விட்டு கொடுக்கிறார்
ராதா கிருஷ்ணன்