Thursday, January 18, 2018

நீலம்



ஜெ

நீலம் இப்போதுதான் வாசித்து முடித்தேன். உங்கள் புனைவுகளில் முதன்மையானது நீலம் என நினைக்கிறேன். எல்லாவகையிலும் முக்கியமான ஆக்கம் அது. அது ஒரு பித்துநிலையில் உள்ளது. கூடவே ஆழமான ஒரு தத்துவாம்சமும் அதில் உள்ளது. அதில் ராதை கிருஷ்ணனையும் உள்ளடக்கிய ஒரு பெரிய ஃபினாமினாவாக வளர்ந்திருக்கிறாள் என்பதை வாசித்துமுடித்ததும்தான் உணர்ந்தேன். கிருஷ்ணனே அவள் சன்னிதிக்கு வந்து நின்றிருப்பதை வாசித்தபோதுதான் ராதை கிருஷ்ணனுக்குப் பெயரிட்டவள் அல்லவா என்ற எண்ணம் வந்தது



கல்யாண்