Saturday, January 13, 2018

முழுமை



அன்புள்ள ஜெ

தர்மசங்கடங்களிலிருந்து மேலும் தர்மசங்கடங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது வெண்முரசு. இந்நாவலில் போருக்கு முன்னர் ஒவ்வொருவரும் கொள்ளும் வெவ்வேறு பாவனைகளும் உணர்வுநிலைகளும் இக்கட்டுகளும் சொல்லப்படுகின்றன. அவை அந்த சிக்கல்களுக்கு வெளியே இருந்துகொண்டிருக்கும் பெண்கள் வழியாக வெளிப்படும்போதுதான் அவை முழுமையை அடைகின்றன என்று தோன்றுகிறது. அசலையும் தாரையும் அழகான அக்கா தங்கைபோல மனசைக்கவர்கிறார்கள். இந்தப்பெண்களைச் சொல்லாமலேயே கதையைச் சொல்லியிருக்கலாம். ஆனால் இவர்கள் இல்லாமல் கதை அழகையும் முழுமையையும் அடையமுடியாது என்று நினைக்கிறேன்


செல்வன்