அன்புள்ள ஜெ
நலம்தானே?
எழுதழலுக்கு பின்னர் போர்ச்சூழலில்
என்ன எழுதமுடியும் என நினைத்திருந்தேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் சென்றடையும் இருதலைக்கொள்ளி
நிலையை தொடர்ந்து சொல்லிக்கொண்டே செல்லும் வெண்முரசு ஓர் உச்சநிலையிலேயே சென்றுகொண்டிருக்கிறது.
இன்று தருமன் கொள்ளும் இருதலைக்கொள்ளிநிலைமைதான் உச்சம். என்ன செய்வது என வாசகர்களே
மலைத்துப்போய்விடும் இடம் அது. இரண்டுமே சரி, இரண்டுமே தவறு என நினைக்கத்தோன்றுகிறது.
உண்மையில் மிகப்பெரிய நிகழ்வுகளுக்கு
முன்னாடி இதேபோல ஒரு பெரிய மலைப்புநிலை உருவாகிவரும் என நினைக்கிறேன். ஒருமாதிரி மூளை
ஸ்தம்பித்துப்போய்விடும் நிலைமை அது. அதிலிருந்துதான் அத்தனை வன்முறைகளும் எழுகின்றன.
கற்றுக்கொண்டவையும் இயல்பாகக்கொண்ட பண்புகளும் எல்லாம் இல்லாமலாகி மனிதர்கள் சுயநலத்தினாலும்
பகைவர்மீதுகொண்ட பயத்தாலும் செயல்பட ஆரம்பிக்கும் நிலைமை அது
எஸ்.கார்த்திக்