அன்புள்ள ஜெ ,
ஒளி தந்து இருளில் மறையும் சூரியன் போல துச்சளை வந்து செல்வது இருந்தது , அவள் துரியோதனனை காணும் முன்புவரை பிரகாசமாக இருந்தாள்.
கலிசுனை காகவிழி போல இருந்தது என படிக்கும் போதே ஜில்லிட்டது , இன்றும் அது தொடர்ந்தது ,அதிலிருந்து வெளிவந்த காகங்களும் கருநாகங்களும் பலி பெறாமல் திரும்ப செல்லாது என தோன்றியது .
இருட்டு நம் அசைவை இன்னொருவருக்கு காட்டாது ,அந்த கட்டுப்பாடற்ற சுதந்திரம்தான் கலி ஒருவருக்கு தருகிறான் என தோன்றுகிறது , மக்களிடம் இருந்த ஆர்வம் அதை காட்டியது என நினைத்தேன் .
கலிசுனை ஒரு நோக்கில் போர்க்களம் என நினைத்தேன் , நரிகளை பாண்டவர்களாக , அவர்கள் வாழிடத்தில் கலி கண் விழிப்பதாக எண்ணினேன்
ராதாகிருஷ்ணன்