Sunday, January 21, 2018

முதியவர்


ஜெ

பீஷ்மரின் சொற்களைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு சண்டையில் கனிந்த முதியவர் அனுபவம் வழியாகக் கண்டு சொல்லும் சொற்கள் அவை. அவற்றை அவர் சபையில் சொல்லிவிட்டார். ஆனால் எவரும் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அதையும் அவர் சொல்லிவிட்டார். ஆனால் அவர் மீண்டும் துரியோதனனின் போருக்குத் துணைநிற்கிறார். அங்குதான் பிழை வருகிறது. அதாவது தர்மத்தை செய்வதா சத்தியத்தைக் கடைப்பிடிப்பதா? அவர் சத்தியத்தைக் கடைப்பிடித்தால் மட்டும் போதுமென நினைக்கிறார். அங்குதான் வன்முறை அழிவு ஆகியவை தொடங்குகின்றன என நான் நினைக்கிறேன். பீஷ்மரிலிருந்தே அனைத்தும் தொடங்குகின்றன என்று தோன்றுகிறது


செல்வராஜ்