நேற்று சிறுகதை விவாதம் பற்றி கூறுகையில் இந்த உளச் சிக்கலைப் பற்றிய மேற்கோள் வந்தது. எளியவர்கள், தான் பிறரை விட உயர்ந்தவர்கள் எனக் கருதிக் கொண்டு செயல்படுவது என இந்த உளச் சிக்கலைச் சொல்லலாம். இதன் சிறந்த எடுத்துக்காட்டாக பிந்துமதியும், கரேணுமதியும் வந்துள்ளார்கள். வெண்முகில் நகரத்திலேயே அவர்களின் இக்குணாதிசயம் வந்துவிட்டிருக்கிறது. இப்போது இன்னும் தெளிவாக துலங்கி வருகிறது.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்