Thursday, January 25, 2018

ஒலிவடிவம்



அன்புள்ள ஜெயமோகன்

2009 களில்தான் நான் விஷ்ணுபுரத்தை வாசிக்க நேர்ந்தது. அந்த காலகட்டத்தில் அதன் எந்தந்த பகுதிகளை எத்தனை முறை வாசித்தேன் என்று கணக்கில்லை. ஆனால் முடிவில் பிச்சியாய் பேய்ச்சியாய் சின்னாட்கள் வாழ்ந்தேன் என்பது நிஜம். இப்பொழுது புரிகிறது எண்ணுள் எழுந்த தவிப்பிற்கும் தாங்கொண்ணா  அலைக்கழிப்புக்குமான காரணம் அந்த படைப்பு எழுப்பிய உணர்வெழுச்சியை சக்திநிலையை என்னால் ஆள முடியாது போன இயலாமையே என்று.

ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து சென்ற வாரம்தான் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமானை தரிசிக்க முடிந்தது. அங்கு  எங்கள் இருவருக்குமான உரையாடலுக்கு வார்த்தைகள் ஏதும் தேவைப் படவில்லை.  அதன் நீட்சியாக என் பிள்ளைகளுக்கு இந்தப் புத்தகத்தை கொண்டு செல்ல விரும்பினேன் ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழில்  சரளமாக வாசிக்க முடியாது ஆங்கில வாசிப்பில் ஊன்றிய தலைமுறையைச் சேர்ந்தவர்களாதலால் அவர்களுக்காக குரல் பதிவு செய்ய ஆரம்பித்தேன்.

உங்களுக்கு சொல்வது முறை என்று தோன்றியது. 

உங்கள் வாசகர் வட்டத்தில் எவருக்கேனும் தேவைப்படும் பட்சத்தில் என்னை அனுகவும் செய்யலாம் என்பதும் ஒரு பின்குறிப்பு. இது விஷ்ணுபுர வட்டத்திற்கு நான் அளிக்கும் படையல்.

மிக்க அன்புடன்.


கிருத்திகா ஸ்ரீதர்