ஜெ
விஜயை சகதேவனைப் புண்படுத்தும் இடத்தை பலமுறை வாசித்தேன். பலவீனமான பெண்களின்
இயல்பு அது. அவள் எங்கே பேசவேண்டுமோ அங்கே பேசாமலேயே வந்துவிட்டாள். சல்யரின் செய்கைக்கு
எதிராக தன் தந்தையிடமும் அண்ணன்களிடமும் அவள் வாயே திறக்கவில்லை. ஆனால் இங்கே கணவனிடம்
சீறுகிறாள். ஏனென்றால் அவன் ஈஸி டார்கெட். அவனைப்புண்படுத்தவே குந்தியைப்பற்றிச் சொல்கிறாள்.
அதன்பின் அவனைப்போன்றே இருக்கும் மகனைப்பற்றிக் கேவலமாகச் சொல்கிறாள். அவனை நேரடியாகப்பழிக்காமல்
அந்த மகனைப்பழித்து தன் காழ்ப்பை கொட்டுகிறாள். மகன் மேல் அவள் காட்டும் வெறுப்பு உண்மை
அல்ல. அப்போது அதைச் சொல்கிறாள் அவ்வளவுதான். எல்லா பெண்களும் கையிலே எடுக்கும் இரண்டு
ஆயுதங்கள் அவை
எம்.நெல்லையப்பன்