Saturday, January 20, 2018

கௌரவர் மனநிலை



அன்புள்ள ஜெ ,


பரிதாப உணர்ச்சி செயலூக்கத்திற்கு  மிக பெரிய தடை , இந்த உணர்வு தமோகுணம் , யதார்த்தம் (  நிதர்சனம் )  என்னவாக  இருக்கிறதோ  அதை மட்டுமே கொண்டு எதிர்வினையாற்றுவது  மட்டுமே சரியான சத்ரிய இயல்பு , அது மட்டுமே வெற்றியை  நோக்கி நகர்த்த கூடிய ஒன்று . கிருஷ்ணன் அஸ்தினாபுரி  மக்களின் மனநிலையை விவரித்த  போது இதைத்தான் எண்ணினேன் , பாண்டவர்கள்  இவர்களை 'என் மக்கள்' என எண்ணுவதை இந்த விவரிப்பின்  மூலம் விட்டுவிடுவர் ,குற்றஉணர்வு இல்லாமல் இனி இவர்களை அழித்தொழிக்கலாம்  :)

இந்த ஒன்றிற்காகவேதான் கிருஷ்ணன் இவர்களின் மனநிலையை எடுத்துரைத்தான் என எண்ணினேன் .
.......
இன்னொன்று, கிருஷ்ணன்  அஸ்தினாபுரி அவையில் நிகழ்ந்ததை  எடுத்துரைத்தை போலவே யதார்த்தத்தில் சபை நிகழ்வு நிகழ்ந்திருக்கும்  , முக்கியமாக  கணியர் -துரியோதனன்  உரையாடல் யதார்த்தத்தில்  நிகந்திருக்காது  ,முந்திய அத்தியாயங்களில்  நிகழ்ந்த இந்த அவை நிகழ்வு காவிய  இயல்பில் வருவது , அதுவும் நிஜம்தான்  ,ஆனால் அது நிகழ்ந்தது  சபையில்  இருந்த  உள்ளங்களுக்கிடையே , இன்று கிருஷ்ணன் தர்மனின்  சபையில் உரைத்தது  அங்கு நிகழ்ந்த புற உரையாடல் (  வார்த்தைகளாக  வெளிப்பட்ட  உரையாடல் ) .
.....
சார் , நான் இதை கவனித்து இருக்கேன் , பொது போக்கிற்கு  மாறான ஒரு விஷயத்தை வைக்க வேண்டுமெனில் அதை கேட்க , அதை பொது போக்கு நின்று கவனித்து உள்வாங்க,  ஒரு முன்சூழல்  அமைக்க  வேண்டும் , இல்லையெனில் அந்த மாற்று எண்ணம்  உள்வாங்காமலேயே போய் விடும் , கரேனுமதி மற்றும் அவள் தங்கை  தான் இவ்வாறு சொல்ல வருவோம்  என்பதை சபைக்கு  முன்பே குறிப்புணர்த்தி  இருந்தால் ,அது சிறிது சலனத்தையாவது சபையில்  உருவாக்கி இருக்கும் .


இதை ஒரு உதாரணம் வழியாக சொல்கிறேன்  , நீங்கள் துவக்கத்தில் பெருநாவல் கொண்டு வரும் முன்பு ,பெருநாவல்  அல்லது நாவல் பற்றியான  சரியான புரிதலை சூழலுக்கு உணர்த்துகிறீர்கள்  ,பிறகு உங்கள் நாவலை  வெளியிடுகிறீர்கள்  :)
ராதாகிருஷ்ணன்