Monday, January 15, 2018

சபை



ஜெ

வெண்முரசின் இந்தப்பகுதிகள் ஆள்க்கூட்ட மனதத்துவத்தின் பல பகுதிகளை காட்டுகின்றன. ஒரு சபை கூடுவது நுட்பமாகக் காட்டப்படுகிறது. ஒவ்வொருவரும் எந்தெந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை  அவர்களில் எவரேனும் ஒருவரின் பார்வையில் படும் அவர்களுடைய உடல்மொழியைக் கொண்டுச் சொல்லியிருக்கிறீர்கள். இது வெண்முரசிலே வரும் உத்தி. அது மிகச்சிறப்பானது.

விதுரர் என்ன நிலையில் இருந்தார் துரியோதனன் என்ன மனநிலையில் இருந்தான் என்றெல்லாம் நேரடியாகச் சொல்லாமல் அவர்களின் உடல்கள் எப்படி இருந்தன என்ரு சொல்வதன் வழியகாவே காட்டிவிடுகிறீர்கள். இந்தப்பகுதிகளை சும்மா சபை கூடுவதன் சித்திரம் என்று தள்ளிவிட்டுப்போனால் பிற்பாடு சபைக்குள் என்னென்ன நிகழ்கிறது என்ன மனஓட்டங்கள் வெளிப்படுகின்றன என்பதைப்புரிந்துகொள்லமுடியாமல் போயிவுடும் என நினைக்கிறேன்.

நிறைய சந்தர்ப்பங்களில் ஓரிருவர் தவிர பிறர் சபைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதே கிடையாது.அவர்கள் வேடிக்கைபார்க்கவே விரும்புகிறார்கள். அதை அவைநிகழ்ச்சிகள் காட்டுகின்றன. இதை இன்றைக்குக்கூட முக்கியமான மீட்டிங்குகளில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்


ரவிச்சந்திரன்