ஜெ
விஜயை பற்றி வந்திருந்த கடிதங்களுக்குப்பிறகுதான் நான் அந்த அத்தியாயத்தை போய்
விரிவாக வாசித்தேன். அவளுடைய அலைக்கழிப்பு மிகையில்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது. அவளுடைய
தூக்கமில்லாத நிலை. அவளுடைய சிக்கல் இங்கே வாழ்வது அவளுக்கு சுத்தமாகப்பிடிக்கவில்லை
என்பதுதான். எல்லாவற்றையும் சலிப்பும் வெறுப்புமாகவே அவள் பார்க்கிறாள். ஆகவேதான் திரும்பி
இளமைக்குச் செல்ல விரும்புகிறாள். ஆனால் அது முடியாது என்பதை அறிந்திருப்பதனால் வருத்தப்படுகிறாள்
அவளை சகதேவன் கைப்பற்றியதிலுள்ள வன்முறையை இப்போதுதான் சரியாக உணரமுடிகிறது.
அப்போது அது இயல்பாக இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல அது எவ்வளவு குரூரமானது என தெரிகிறது.
அவளேகூட வயதானபின்னர்தான் எவ்ளவு இழந்தோம் என்றும் வாழ்க்கையே போய்வ்ட்டது என்றும்
உணர்ந்துகொள்கிறாள்
செல்வி