அன்புள்ள ஆசிரியருக்கு
குருதிச் சாரல்-38
இனிமை என்பது பற்றிய துச்சளையின் கூற்று திகைக்க வைத்தது.
இனிமையைத் தேடி வளர்கிறோம்.
ஆனால் இனிமையை அடைவதென்பது நாம் சிறிதாவது அழியும் போதுதான்.
காதலோ, பணியோ, சேவையோ எதன் மூலம் கிடைக்கும் இனிமையும் நாம் நம்மை
சிறிதாவது அழித்துக் கொள்ளாமல் கிடைக்காது.அதிலும் இனிமையின் உச்சத்தை நாம் முற்றழிந்துதான் பெற முடியும்என்ற மெய்மையை சாதரணமாக உரைவிட்டாள்.
அதை எல்லோராலும் உணர முடியாது இழந்து பெற்றவர்களால் மட்டுமே உணர முடியும்.
உணர்த்தியதற்கு நன்றி.
கா.சிவா