Sunday, February 17, 2019

தனிமை3



அன்புள்ள ஜெ

ஜே கிருஷ்ணமூர்த்தி இந்திராகாந்தியைப் பற்றிச் சொல்லும்போது அவரிடம் தனிமை சூழ்ந்திருப்பதைக் கண்டேன் என்று சொல்கிறார். மாமனிதர்கள் எல்லாருமே மகத்தான தனிமையில்தான் இருக்கிறார்கள். காந்தியும்சரி இட்லரும் சரி ஐன்ஸ்டீனும் சரி டால்ஸ்டாயும்சரி. ஆனால் அவர்கள்தான் இங்குள்ள எல்லாவற்றையும் உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய உலகத்திலேதான் நாம் வழ்ந்துகொண்டிருக்கிறோம்

பெருந்தனிமைகள் சுழல்காற்றுகள்போல் இந்தப் பெருநிலமெங்கும் அலைந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றையும் அள்ளி இடம் மாற்றுகின்றன. எழுப்பப்பட்டவற்றை இடிக்கின்றன. இடிபாடுகளை அள்ளிக்குவித்து கோபுரங்களாக்குகின்றன. பெருந்தனிமைகள் கொண்டு இப்புவியில் நாற்களம் ஆடுகின்றது ஊழ்.

இந்த வரியை நான் இப்படித்தான் புரிந்துகொள்கிறேன். இந்த வரி பூரிசிரவஸின் தனிமையைச் சொல்வதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இது கர்ணன் துரியோதனன் அர்ஜுனன் யுதிஷ்டிரன் பீமன் என அனைவருடைய தனிமையையும் சொல்வதாக தோன்றுகிறது. கொந்தளிப்பான ஒரு வரி இது.

மகாதேவன்