ஜெ
போகிற போக்கில் வரும் ஒரு இடம் எனக்கு ஓர் அதிர்ச்சியை உருவாக்கியது. இருட்டிவிட்டது. ஆகவே போர் முடிந்துவிட்டது என நினைக்கிறார்கள் சிந்துநாட்டு வீரர்கள். ஜெயித்துவிட்டோம் என்று அவர்கள் கொண்டாட்டம் போடுகிறார்கள் அப்போது அவர்கள் சொல்வதுதான் ஆச்சரியமானது
“சைந்தவர் வெல்க! வெல்க ஜயத்ரதர்!” என்று படைகள் கூச்சலிட்டன. எங்கோ “இனி பாஞ்சாலத்தரசி சைந்தவர்க்கே!” என ஒரு குரல் கூவியது. அத்தனை கொந்தளிப்பிலும் அதை சில செவிகள் கேட்டன. “கவர்க பாஞ்சாலியை! கொள்க திரௌபதியை! திரௌபதியே சைந்தவ அரசி!” என சைந்தவர்கள் கைகளைத் தூக்கி கூச்சலிட்டனர். சிரித்தபடி, சிரிப்பு புரைக்கேறி அழுதபடி நடனமிட்டனர்.
அதாவது பாஞ்சாலியை ஜெயத்ரதன் சிறைப்பிடித்துக் கொண்டுவர முயன்றதை அவர்கள் கொண்டாடுகிறார்கள். அதில் தோற்றதில் தான் அவர்களுக்கு அவமானம். இனி பாஞ்சாலியை ஜெயக்த்ரதன் கைப்பற்றுவான் என நினைக்கிறார்கள்
அந்தக்காலத்தில் இருந்த மனநிலை என்ன என்பதைக் காட்டும் இடம் இது
எம்