Saturday, February 9, 2019

இறப்புகள்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

அத்தியாயம் 39.   தொலைக்காட்சி, சினிமா உள்ளிட்ட பிற  மகாபாரதங்களில்  அபிமன்யூ கொல்லப்படுவது  மிகுந்த பரிதாபத்தை உண்டாக்குவதாக, இருக்கும்.  வெண்முரசில் அவனது கொலை அதிர்ச்சி உண்டாக்குகிறது ஆனால் பெரும் பரிதாபத்தை  தோற்றுவிப்பதில்லை.   தந்தையின் அன்புக்கான ஏக்கம், தன் வீரம் திறன் குறித்த பெருமிதம், இளையயாதவர் மீது அவன் கொண்ட பேரன்பு என்று மூன்று அடிப்படைகளில் அவன் வாழ்வு அமைகிறது.  முன்னிரண்டும் அவனை இரக்கமற்றவனாகவும் பெரும் வீரனாகவும் நிறுத்துகின்றன.  மூன்றாவது இளையயாதவனின் பெருங்கருணை என்று கொள்கிறேன்.  பாணசுரரிடம் இருந்து அவனைக் காக்கும் இளையயாதவன் ஊழின் படைக்கலமான அவனுக்கு அப்பிறப்பில் அதிகபட்சம் கிடைக்க சாத்தியமான ஒன்றை வழங்கிவிட்டான் என்றே எண்ணுகிறேன்.  மிகப்பெரும் வெண்முரசுக்கு அபிமன்யூவின் பங்களிப்பு குறைவு எனினும் எழுதலில் அவனது பணி முக்கியத்துவம் வாய்ந்தது.   அவனுக்கு என் அஞ்சலி.

அன்புடன் 
விக்ரம்
கோவை