Saturday, February 9, 2019

தந்தை மகன்



அன்புள்ள ஜெ

வெண்முரசில் தொடர்ச்சியாக தந்தை மகன் உறவுகள் வந்தபடியே இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. பொதுத்தன்மையும் உள்ளது. அதில் பிருஹத்காயர் ஜயத்ரதன் உறவு மிகச்சிக்கலானது. அவருடைய பாவத்தின் விளைவு அவன் என நினைக்கிறார். ஆனால் அவன்மேல் பெரும்பிரியம் கொண்டிருக்கிறார். அவனை தான் கொல்லக்கூடும் என்ற சாபத்தால் அலைக்கழிக்கப்படுகிறார். ஆனால் அவனைத் தொட அவரால் முடியவில்லை. அந்த இக்கட்டுகளும் கொந்தளிப்புகளும் அந்தக்கதாபாத்திரத்தை மறக்கமுடியாததாக ஆக்குகின்றன. அதிலும் அவருடைய கைகள் மிகமுக்கியமான குறியீடு. அவை அவருடைய ஆழ்மனசுதான். அவை செய்தபாவம் அவற்றாலேயே தீரவேண்டும். அந்தக்கைகள் அவரை ஆட்டிப்படைக்கின்றன. அவைதான் கடைசியில் ஜயத்ரதனைக் கொல்லவும்போகின்றன. இந்தக்கதை அத்தனை உணர்ச்சிகரமான மடிப்புகளும் ஏராளமான குறியீட்டு அர்த்தங்களும் கொண்டதாக விரிந்தப்டியே செல்கிறது

அருண்குமார்