Thursday, February 7, 2019

குந்தியும் கர்ணனும்



அன்பு ஜெமோ சார்,

                 வெண்முரசின் குந்தி -கர்ணன் சந்திப்பு பேசித் தீராதது.

                  பெருந்திறல் வீரர் அறிந்தே அன்னையிடமும்,  அன்னைக்காகவும் நிறைவுடன் தோற்பது
                         
                  கர்ணனின் உயரம் வெண்முரசில் மீளமீள வருவது.குந்தியின் சிற்றுருவம் சந்திப்பின் போது ஒரு சிறந்த குறியீடு. அவனின் ஓங்கிய உயத்திற்கு முன் ஒடுங்கிய சிற்றுருவாக நிற்கிறாள். கொடுக்கும் பெரும் கரத்திற்குள் அடங்கும்,எளிய ,பெற்றுக் கொள்ளும் ,சிறிய கரத்தையுடையவளாகிறாள்.
  
              ஒரே நாழிகையில் வாழாத முழுவாழ்க்கையையும் வாழ்ந்து முடிக்கிறார்கள்.இருவரின் வெறுப்பையும் கொட்டித் தீர்த்த பின் ... , ஆழத்திலிருக்கும்  மந்தணங்களையும், 
கரவுகளையும் அறிந்தவராய்
முதன்மையான உறவாக ஒருவரையொருவர் உணர்ந்து இருவரும் உணரும் அணுக்கம், அதனால் தொற்றிக் கொள்ளும் உவகையென சந்திப்பு
வெண்முரசின் உச்சங்களில் ஒன்று.

                      ஏனோ சத்யவதி விசித்திரவீர்யனின் சந்திப்பு நினைவில் எழுந்தது.
  
இரா.சிவமீனாட்சி செல்லையா