அன்புள்ள ஜெ
வெண்முரசின் வெய்யோனில் வரும்
கதை வளர்ந்து வந்து இப்போது முடிவுறப்போகிறது. அங்கிருந்து மீண்டும் இந்தக்கதையை முழுமையாகவே
வாசித்தேன். அதிலிருக்கும் ஒருமை ஆச்சரியப்படுத்துகிறது பிருஹத்காயரின் கதாபாத்திரம்
அப்போதிருந்தே தனித்தன்மையுடன் தான் உருவாகி வந்திருக்கிறது. அவருக்கு எந்த அறமும்
இல்லை. அவர் தவம்செய்வதுகூட தன் ஆணவத்துக்காகத்தான். அவர் ஒருவகையான முரட்டு மூடராகவே
அரசனாகவும் இருக்கிறார். ரிஷியாகவும் இருக்கிறார். முரட்டு மூடர்களுக்குரிய கண்மூடித்தனமான
அன்பை மகன்மேல் வைத்திருக்கிறார். அந்த அன்பின் கண்மூடித்தனமே அவரையும் அழித்து ஜயத்ரதனையும்
அழிக்கிறது
மகாதேவன்