அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
காலை ஒரு மணிநேரம் நடந்து திருப்பும் வழியில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு புதர்கள்அகற்றப்பட்ட இடத்தில் மண்குவியலில் ஒரு பாம்பு தென்பட்டது. முதலில் சிறு மலைப்பாம்பு போல் தென்பட்டது. அதிர்ச்சியும் அச்சமும் அடைந்து நின்று நோக்கினேன். அசைவற்ற அதை நெருங்கி சென்று பார்த்தேன். அதுஇறந்த பாம்பு. மலைப்பாம்பு அல்ல. கட்டுவிரியன் அல்லது கண்ணாடிவிரியன் என்ற வகையில் ஏதாவதுஇருக்கலாம். கட்டிடவேலை செய்பவர்களால் தலை சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டு இருந்தது. எங்கள் வீடுஇருக்கும் பகுதி முழுவதும் மரச்செறிவுடன் புதர்களும் மிகுந்தது. ஏராளமான பாம்புகள் இருக்கும் இடம். வேப்பமரக்கிளையில் வால்சுற்றி தன் வாயில் ஓணான் ஒன்றின் கழுத்தைக் கவ்வியவாறு தொங்கிய ஒருபச்சைப் பாம்பை முதன்முதலில் இந்த வீட்டிற்கு குடிவந்தபோது கண்டேன். அது குட்டி பாம்பு. மிகவும் அழகாகஇருந்தது. ஓணானின் கழுத்தைக் கவ்வி இறுக்கி இருந்த அதன் கண்கள் உணவு வேட்கை அல்லது கொலைவெறிஅல்லது காமத்தின் தாபம் என்பதுபோல் தென்பட்டது. சாலையில் குறுக்காக கடந்து செல்லும் பாம்புகளைக்கண்டால் நின்று விடுவேன்.
வீட்டிற்கு வந்து வெண்முரசு வாசிக்கத் தொடங்கினேன். கார்கடல் 26-ஆம் அத்தியாயம். முடித்தவுடன் சோகமாகஇருக்கிறது.
அன்புடன்
விக்ரம்
கோவை