Tuesday, February 12, 2019

மயக்கம்



அன்புள்ள ஜெ,

ஜயத்ரதனின் முடிவு எதிர்பார்த்தது. ஆனால் அதற்குச்செல்லும் பாதையில் எத்தனை நுண்ணிய திருப்பங்கள். அவன் ஒளிந்திருக்கும் அந்த ஆழத்தில் வந்து அவனை கொலைக்கு தள்ளிவிடுவதே அவன் தந்தைதான். அது அவனே எண்ணிக்கொள்ளும் கனவா? அல்லது அவன் தந்தையின் ஆழமா? அல்லது கௌரவர்கள் அனைவரும் சேர்ந்து அதைச் செய்கிறார்களா? அது மழைமூட்டம்தான் என அவர்களுக்கு தெரிந்தும் அந்த பழிநிகர்செய்யும் ஆசையால் அவர்கள் முரசை அறைந்தார்களா? எப்படிச் சொல்ல முடியும்? எல்லாமே மயக்கமாகவே உள்ளது. இப்படி எதையும் சொல்லலாம் எல்லா கோணமும் சரியே என்பதுபோன்ற தருணங்கள்தான் இலக்கியத்தின் திருப்புமுனைப்புள்ளிகளாக அமைகின்றன

எம்.ராஜேந்திரன்