Tuesday, February 5, 2019

குறுநிகழ்வு



ஒரு நாவல் மூன்று முக்கியமான தளங்களை நோக்கி எழுதப்பட்டிருக்க வேண்டும்.

1. ஒட்டுமொத்த மானுட வாழ்வையும் கேள்விக்குள்ளாக்குவது
2. கலாச்சாரத்தை, பண்பாட்டை விசாரணைக்குள்ளாக்குவது
3. வரலாற்றின் போக்குகளை விரிவக்குவது, சில தருணங்களில் மாற்று வரலாற்றை எழுதுவது

இத்தகைய பெரு மொழிபுகளுக்கு இணையாகவே அன்றாட வாழ்வியலின் குறு நிகழ்வுகளைக் கூறிச் செல்லவும் வேண்டும். அப்போது மட்டுமே ஒரு நாவல் காலங்கடந்தும் நிற்கும்.

வெண்முரசு இலற்குச் சரியான உதாரணம். பெரும் தரிசரங்களுக்கு இணையாகவே வாழ்வியல் தருணங்களும் பின்னி பிணைந்து சென்று கொண்டிருப்பதை வாசகர் அறிவர். என்னளவில் இத்தகைய மானுடத் தருணங்களே வாசிப்பின்பத்தை நல்குபவை. 

அத்தகைய ஒரு தருணம் கார்கடல் 38 ஆம் அத்தியாயத்தில் வந்துள்ளது. பத்ம வியூகத்துக்குள் நுழைய அபமன்யுவை ஊக்கும் தருமர் முன் ஒரு கணம் தயங்குகிறான் அவன். வாணாளெல்லாம் மரணத்தை தேடி ஓடியவன். போர் துவங்கிய நாளிலிருந்து மரணம் வேண்டுமென்று பொருதியவன். ஆயினும் வாழ வேண்டும் என்ற துடிப்பு நிறைந்த இளையவன். அவன் ஆழம் வாழவே விழைகிறது. அவன் மரணத்தைத் தேடித தேடி சண்டையிடும் போதெல்லாம் விளையாட்டாகவே அதை எடுத்துக்கொண்ட அவன் ஆழுள்ளம் இத்தருணத்தில் தயங்குகிறது. ஏனெனிலில் அது மரணத்தை உணர்ந்து கொண்டது. ஆகவே தயங்குகிறது. 

இதே போன்ற மற்றொரு தருணம் அபிமன்யுவின் காலை உறக்கம். அது சிறுவர்களின் குணம். அவன் பெரு வீரன், ஆயினும் இளஞ்சிறுவன். மனம் கனக்கிறது. அர்ஜுனனின் கண்ணீர் வேறு அறுக்கிறது. 

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்.