Tuesday, February 19, 2019

அங்கனின் குணாதிசயம்




அன்புள்ள ஜெ

அங்கன் பீமனால் தோற்கடிக்கப்பட்டது வெண்முரசுக்குள் ஆச்சரியத்தை அளித்தது. அதற்கான காரணம் பலகோணங்களில் சொல்லப்படுகிறது. அது நாகக்கதைசொல்லியின் கோணத்தில் சூரியனை ராகுவும் கேதுவும் கவ்வும் தருணம் ஆகையால் அப்படி நிகழ்ந்தது.

உண்மையான காரணம் வாசகனுக்கே விடப்படுகிறது. குந்திக்கு அளித்த வாக்கு அது. கர்ணன் பீமனின் வேகத்தால் தோற்கடிக்கப்படுகிறான். அவனை வெல்லும் அம்பு கையில் இருந்தும் தோற்கிறான்.

இன்னொரு பக்கம் அது கர்ணனின் அகங்காரம் அடிபடுவதும்கூடத்தான். ஒவ்வொன்றையும் மூன்று கோணங்களில் சொல்ல இந்தக்கதைசொல்லும் உத்தி பயன்படுகிறது. 

ஆனால் உண்மையில் மகாபாரத மூலத்தில் கர்ணன் அனைவரிடமும் தோற்றோடுகிறான் அர்ஜுனன் பீமன் ஆகியோரிடம் மட்டுமல்ல சாத்யகியிடமும் அவன் தோற்றோடுகிறான். அபப்டியென்றால் எப்படி அவன் அர்ஜுனனுக்கு சமானமான வீரன்,. அவனை கொல்லவேமுடியாது, ஆகவே ஏமாற்றிக்கொன்றார்கள் என்றெல்லாம் கதை வருகிறது?

 அது மகாபாரதத்தில் பெரிய முரண்பாடுதான். கர்ணன் எப்போதுமே போரில் பெரிய வீரனாக காட்டப்படவில்லை. அவன் கொன்றது கடோத்கஜனை மட்டும்தான். ஆனால் அவனுடைய இறப்ப்புக்குப் பின்னாடி அவனை பெரிய வீரனாக மகாபாரதம் விரித்துக்காட்டுகிறது

எஸ்.ராஜசேகர்