Sunday, February 3, 2019

சின்ன உறவுகள்


ஜெ

குந்தி கர்ணன் சந்திப்பில் ஒரு அற்புதமான இடம் வருகிறது. குந்தி ஒரு குடிலில் எவருடனோ பேசிக்கொண்டிருக்கிறாள். அது அவள் ஆழ்மனசில் வாழும் காதலனாகிய விதுரர்தான். அப்போது அங்கே கர்ணன் வருகிறான். அவள் முகம் வெளீரி வெளியே வருகிறாள். எல்லா அம்மாக்களும் மூத்த மகனைப் பயப்படுகிறார்கள் என ஒரு வரி வருகிறது.

அதன்பின் கர்ணனுக்கும் குந்திக்குமான அந்த விளையாட்டு வருகிறது. அவன் உயரத்தை அவள் கேலிசெய்கிராள். அவன் அவளை கேலிசெய்கிறான். அதுவும் அம்மாவுக்கும் மூத்தமகனுக்குமான விளையாட்டுதான். அதுஒரு மேன் வுமன் விளையாட்டு. மற்ற மகன்களிடம் அந்த உரவு இருக்காது

அந்த நுட்பமான இடத்தை ஆச்சரியத்துடன் வாசித்தேன். இத்தனைபோரும் அழிவும் கொந்தளிப்புகளும் வந்துகொண்டிருக்கும் வெண்முரசில் இந்தமாதிரியான சின்ன விஷயங்களால்தான அழகு பூர்னமாகிறது

மகாதேவன்