Sunday, February 3, 2019

அம்புகளின் வாழ்க்கை



அம்புகளின் வாழ்க்கை என்பது தூளியிலிருந்து எழுந்து நாணிலமர்ந்து விண்ணிலேறி பறந்து சென்று இலக்கிலமைவது வரைக்குமான சில கணங்களே. பிறந்து ஒருமுறை பறந்ததுமே மறையும் பறவைகள் -  போர் பற்றிய வர்ணனைகளில் எனக்கு முக்கியமாகப் படுவது அம்புகளையும் படைக்கலங்களையும் பற்றி இவ்வாறு வந்துகொண்டே இருக்கும்வரிகள் தான். இவை போரை வேறு ஒரு தளத்துக்கு எடுத்துக்கொண்டு செல்கின்றன. போர் என்பது மனிதர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பெரிய நிகழ்வு என்று நம்மை நினைக்கவைக்கின்றன. போரில் பேசப்படும் வார்த்தைகளும் உணர்ச்சிகளும் இதைவிடவும் குறுகிய ஆயுள் கொண்டவைதான்

காசிராஜன்