Thursday, February 7, 2019

ப்ருஹத்காயரிஸம்



சார்,

ப்ருஹத்காயர்கள் எங்குமே நிறைந்துதான் இருக்ககிறார்கள். கஷ்டப்பட்டு உழைத்து அதன் பலனை இன்னொருவருக்கு அளித்துவிடுவார்கள்..அதுபற்றிய ப்ரக்ஞையும் இறுதிவரை அவர்களுக்கு இருக்காது..

 
முழு நம்பிக்கையுடன் ஒரு பில்டரை அணுகி வீடு கட்ட முன்பணம் வழங்கி, தினமும் அந்த வீட்டை சரியாக கட்டுகிறார்களா என சரிபார்த்து பின் சொன்னபடி தேக்குமரத்தில் கதவு வைக்கவில்லை என்று கோபித்துக்கொண்டு அட்வான்ஸை திரும்பி வாங்கி சென்ற ஒருவரை நான் அறிவேன். அவர் பார்த்து பார்த்து கட்டிய அந்த ப்ளாட்டில் எங்கிருந்தோ வந்த ஒருவர் வசித்துக்கொண்டிருக்கிறார். எவ்வளவு அழகா கட்டிருக்கீங்க என பில்டருக்கு சான்றிதழும் அளித்தார்கள்..

இன்னொரு ப்ருஹத்காயர் நல்ல மெக்கானிக்காக பார்த்துதான் தன் வண்டியை சர்வீஸ் விடுவார். பின் அவர் நன்றாக சரிசெய்கிறாரா என்பதையும் கவனிப்பார்.. அவரும் மெக்கானிக்காக இருந்தவர். ஆகவே, கொஞ்சம் நகருங்க என சொல்லி சில வேலைகளே இவரே செய்துவிட்டு மெக்கானிக்கு பணம் கொடுத்துவிட்டு வருவார். சில நாட்கள் சென்றபின் பிரேக் ஷூ சரியா மாட்டல கீச் கீச் சுனு சவுண்டு வருதுன்னு வேற ஒருத்தரிடம் சென்று அங்கும் இவரே மாட்டிக்கொண்டிருப்பார்..

நம்ம பிருஹத்காயருக்கும் இதே பிரச்சனைதான்.. அவருடைய மைந்தன் அவர் கையால்தான் இறப்பான் என்ற வரத்தை  கடுந்தவமிருந்து வாங்கியாயிற்று.. பிறகு அவனுக்கு பக்கதுலயே பாடிவீடு கட்டி அமர்கிறார்.. அசட்டு தன்னம்பிக்கை அல்லாமல் வேறு என்ன...??

தன் தவத்தின்மீதும் வரமளித்த கடவுள் மீதும் நம்பிக்கை இருந்தால், அவர்  குருசேத்திரத்துக்கு எதிர்திசையில் அல்லவா சென்றிருக்க வேண்டும் :-)) அப்பொழுது இளைய யாதவன் தவித்திருப்பான்

அன்புடன்,

R. காளிப்ரஸாத்