ஜெ
நேற்று முழுக்க இந்த வரியை வாசித்துக்கொண்டிருந்தேன். வெளியே சொல்லமுடியாத சொந்த அனுபவங்களில் இருந்துதான் இந்த வரியைப்புரிந்துகொண்டேன். ஏன் சாவு போன்ற பெரிய துக்கங்களைக் கடந்துவிடுகிறோம், ஏன் சின்ன அவமானங்களைக்கூடச் சுமந்துகொண்டிருக்கிறோம்? அந்தக்கேள்விக்கான ஆழமான விடை இது
இழப்பு நமது ஆளுமைக்கு அப்பாற்பட்டது. முழுப் பொறுப்பையும் நாம் தெய்வங்களிடம் அளித்துவிட இயலும். ஆனால் சிறுமை நம்மிலிருந்தே தொடங்குகிறது. ஆகவேதான் நாம் அவற்றுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறோம்
மிகப்பெரிய அவமானத்தைச் சந்தித்த இருவர் அவற்றை தங்களுக்குள் பரிமாறிக்கொள்கிறார்கள். அவர்களால்தான் அதைப்புரிந்துகொள்ள முடியும். அவர்களின் அந்த அந்தரங்கமான உரையாடல் என் மனதை இரவெல்லாம் கொந்தளிக்கச்செய்தது
,அ