Wednesday, February 13, 2019

விரிவாக்கம்




ஜெ

சில இடங்களில் மகாபாரதத்திலுள்ள மாயமான நிகழ்ச்சிகளை நீங்கள் தர்க்கபூர்வமாக விளக்குகிறீர்கள். திரௌபதிக்கு கண்ணன் சேலை கொடுத்த காட்சி, பீஷ்மரின் அம்புப்படுக்கை ஆகியவை உதாரணம். சிலவற்றை அப்படியே மாயமாகவே கதைசொல்லியால் சொல்லவைத்துச் செல்கிறீர்கள். சில இடங்களில் மிகமிக யதார்த்தமாக மூலக்கதையில் சொல்லப்பட்டுள்ளவற்றை மாயமாக ஆக்குகிறீர்கள். இந்த லாஜிக் என்ன என்று எண்ணிப்பார்த்தேன். கதையை விரிப்பதுதான் உங்கள் நோக்கமா என நினைத்தேன். ஆனால் இப்போது வாசிக்கையில் கதைக்கு நீங்கள் இந்த ஒட்டுமொத்த நாவலிலும் கொண்டிருக்கும் ஒரு கொள்கைக்கு உரிய குறியீட்டு அர்த்தங்களை உருவாக்குவதுதான் உங்கள் நோக்கம் என்று தெரிந்தது. இப்போது ஜயத்ரதனின் சாவு மிகமிக யதார்த்தமான ஒன்றாக ஒரு பக்கம் இருக்கையில் அவனுடைய தந்தையின் கதையில் இருந்து அவருடைய கைகள் வழியாக கதையைக் கொண்டுவந்து இங்கே முடித்திருக்கிறீர்கள். அற்புதமான முடிச்சு இது. இந்த விரிவாக்கத்துக்காகவே நீங்கள் கதையை எடுத்துக்கொள்கிறீர்கள் என்று தெரிந்துகொண்டேன்

ராஜ்