Sunday, February 10, 2019

உலகங்கள்


ஜெ

மகாபாரதப்போருக்குள் மாய உலகங்கள் கலக்கும்போது என்ன ஆகிறது என்று நான் சிந்தித்துப்பார்த்தேன். மற்ற இடங்களில் போர் மிகுந்த யதார்த்தத் தன்மையுடன் உள்ளது. கற்பனைகள் அளவோடு உள்ளன. ஆனால் மாய உலகில் கட்டின்றிச் செல்கிறது. அங்கே போர் விதவிதமான உலகங்களுக்கு நடுவே நிகழ்வதாக ஆகிவிடுகிறது

ஆனால் நேற்று வாசித்துக்கொண்டிருக்கும்போது தோன்றியது அப்படித்தானே இதை சொல்லமுடியும் என்று. ஒரு வீரன் போரிடுகிறான். அவனுக்குள் எத்தனை உலகங்கள் இருக்கும். எவ்வளவு கனவுகள் இருக்கும். எல்லாம் சேர்ந்துதானே அந்தப்போர் நிக்ழகிறது. அவை அனைத்தையும் சொல்லிவிடவேண்டும் என்பதுதானே ஒரு பெரிய கதைக்களத்தை உருவாக்குவதன் இலட்சியமாக இருக்கமுடியும்? அந்நிலையில் இலக்கியம் என்பது இப்படி பல்வேறு உலகங்களின் அடுக்குதானே?

நாகர் உலகம் ஆழம். அரக்கர் உலகம் அறியமுடியாத இருட்டு. அந்த இரு உலகங்களும் மானுட உலகங்களுடன் பின்னியிருக்கின்றன. மேலே தேவர்களின் உலகம். இந்தப்போரே உலகங்களின் மோதல்தான்

எம்.பாஸ்கர்