ஜெ
சில விஷயங்களை
மிகப்பிந்தித்தான் வாசிக்கிறோம். முதலில் கதைசுவாரசியத்தில் வாசித்துச் சென்றுவிடுகிறோம்.
ஆழமான மறுவாசிப்பு ஓரிருநாட்களுக்குப்பின்னர்தான் சாத்தியமாகிறது. நான் ஜயத்ரதனின்
சாவு அத்தியாயங்களை இன்றைக்கு மீண்டும் வாசித்தேன். அவனை நாகங்கள் கொண்டுபோய் நாக உலகில்
வைத்திருந்தன என்று வாசித்தபோது ஒரு வரி ஆச்சரியமாகத் தெரிந்தது.
அது ஒரு புரிதலை அளித்தது.
ஜயத்ரதன் சென்றது கருவறைக்கு. கருவில்குழந்தையாகத்தான் அவன் உள்ளே இருக்கிறான். அங்கே
அவன் சுருண்டிருக்க அங்கு வந்துதான் அவன் அப்பா அவனை சாவை நோக்கித் தள்ளிவிடுகிறார்.
இந்தப்புரிதல் அந்த அத்தியாயங்களை முழுக்க வேறு பொருளில் காணவைத்துவிட்டது
மனோகர்