வெண்முரசு
நூல்கள் வெளியீட்டு விழா பெரிய அளவில் வெற்றிபெறும். வெண்முரசு போன்ற
கிலாசிக் நாவல் வகைகளுக்குப் பொருமல்கள், பொறாமைகள் எழுவதென்பது அதன்
மகத்துவம் மென்மேலும் பரிமளிக்கும் உண்ர்வு வெளிப்பாடுகளாகும். நூல்கள்
விற்பனை தமிழ் மொழிக்கு உலகத்தில் எங்கேயும் சவாலான விஷயம்தான்.
எழுத்தாளனின் ஊக்கசக்தியைப் பின்னிழுக்கும் செய்லாகத்தான்
இருந்துவருகிறது.
ஆனால் உங்களைப்போன்ற மனவெழுச்சி மிக்கவர்களால் மட்டுமே
அவற்றை புறந்தள்ளி கடந்து வர இயலுகிறது.மொழிக்கும் இலக்கியத்தும் இது
மிகப்பெரிய வரப்பிரசாதம். வெண்முரசு தடையில்லாமல் எழுதி முடித்து அவை
மிகப்பெரிய வெற்றியை அடையவேண்டும் என்பதில் உலகம் முழுதும்
பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் விரும்புகிறார்கள். அறிவுச் செயல்பாட்டுக்கு
உண்டாகும் சின்னச் சின்ன தடங்களே அவற்றை முன்னிழுத்து வெற்றிபெறச்செய்யும்
ஆயுதங்களாகும் என்று நம்புவன் நான்.
எனக்கு எல்லா வெண்முரசு நாவல்களில் ஒவ்வொரு பிரதி வேண்டும்.
துணிந்து செயல் படுங்கள்.
அன்பின் ஜெயமோகன்
நலம்
வெண்முரசு வெளியீட்டுவிழா ஏன் என்பதைப்பற்றி வாசித்தேன். சில ஃபேஸ்புக் எழுத்துக்களை நானும் வாசித்தேன். அனைத்துமே சிறுமையையை மட்டுமே வெளிப்படுத்துபவை
ஒருவர் அப்படி எழுதவேண்டுமென்றால் நாவலை வாசித்தவராக இருக்கவேண்டும். ஒரு நாவலை வாசிக்க மாட்டோம், அதைப்பற்றிய வம்புகளை மட்டும் உருவாக்குவோம், அது இலக்கியக்கடமை என்கிறார்கள்
சிறிய மனிதர்கள். அவர்கள் என்னதான் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால் ரொம்பச் சின்ன விஷயங்கள்
அவர்களிடம் அதற்குமேல் எதிர்பார்ப்பதும் தப்புதான். நீரளவே ஆகுமாம் நீராம்பல் இல்லையா?
சிவராமன்
அன்புள்ள ஜெமோ
நீங்கள் உங்களுக்கு வரும் வசைகளைப்பற்றி எழுதியிருந்தீர்கள். ஒன்றை விட்டுவிடீர்கள்
உண்மையில் இப்போது உங்களுக்கும் சுஜாதாவுக்கும் தவிர யாருக்குமே வாசகர்கள் என்று யாருமே கிடையாது. இதுதான் உண்மை. வாராந்தரிகளில் சிலர் அவ்வப்போது வாசிப்பார்கள். வருஷத்துக்கு ஒரு கடிதம் வரும். மற்றபடி இங்கே இலக்கியமென்று யாரும் எதையும் பெரிதாக வாசிப்பதே இல்லை
இளம்எழுத்தாளர்கள் எல்லாம் ஒரு மனநிறைவுக்காக ஏதோ எழுதுகிறார்களே ஒழிய யாரும் உண்மையில் வாசிக்கப்படுவதே கிடையாது. இன்னொரு எழுத்தாளன் வாசிக்கணும்
இந்த நிலையில் நீங்கள் எழுதி எழுதியே அத்தனைபேரையும் மறைத்துவிடுகிறீர்கள். இதுதான் பிரச்சினை
விடுங்கள். உங்களை மிதித்து தோள்மேல் ஏற ஒருவன் வருவான். அதுவரை நீங்கள்தான். வாழ்த்தவும் வசைபாடவும் உங்களைப்பற்றித்தான் எழுதணும்
ஜெயராம் கிருஷ்ணசாமி
|
ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்