Tuesday, November 4, 2014

விழா கடிதங்கள்






மதிப்புக்குரிய ஜெயமோகன்

இன்று திருதராஷ்டிரநின் மனநிலை கண்டு என்னுள் இருக்கும் சிறுமையின்
அழுதத்தின் காரணமாக கண்களில் கண்ணீர். வேறு சில கணங்களே வாழ்க்கையில்இவ்வாறு வாய்திருகின்றன.

தொடர்ச்சியாக  நெருக்கடியின் கணங்களில் படிக்கநேர்ந்தது. பின்னர் வெண்முரசு விழா ஏன்? வாசித்தேன்.

எவ்வளவு பெரிய ஆளுமையின் மனதோடு தொடர்ந்து வாழ்கிறேன் என்று
நினைக்கும்போது மிகப்பெரும் பரவசம். என் சிறுமைகள் எல்லாவற்றிலிருந்தும்விடுபட்டு மேன்மை பெரும் என் முயற்சியில் தங்களின் எழுத்துக்கள் பெரும்உறுதுணையாக வருகிறது. இன்று உங்களின் ஆளுமையின் பகுதியோடு உணர்வுபூர்வமாகதொடர்பு கொள்ள முடிந்தது. நன்றி .

அன்புடன்
கிஷோர்.



அன்புள்ள ஜே எம்

எரிதல் மற்றும் விழா ஏன் பதிவுகள் வாசித்தேன்.  விழா பற்றி நீங்கள் எழுதியது மிகவும் உண்மை.  வாசிப்பு, அதிலும் இலக்கிய வாசிப்பு என்பதே இந்த தலைமுறையில் இல்லை.  தமிழ் நாட்டில் மட்டும் அல்லாது எல்லா நாடுகளிலும் உள்ள அவலம்.  தொலைக்காட்சியும் I-Phone ம் அறிவையும் ஆத்மாவையும் சீர் அழித்துக் கொண்டு இருக்கின்றன.
இத்தகைய இலக்கிய அறிமுக  விழாக்கள்இவர்களைத் தூண்டுகிறதா என்று பார்க்கலாம்.

நீங்கள் நடத்துங்கள்மேலும் எழுதுங்கள்.

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.

அன்புடன்
சிவா  சக்திவேல்




அன்புள்ள ஜெ

நலமாக இருகிறீர்களா?

குளிர்ந்த இரவின் ஒலிகளின்  நிசப்தத்தில், தனிமையில், வெண் முரசு மற்றும் சு.ரா நினைவின் நதியில். உங்களை ஒரு வாசகனாக நெருக்கமாக உணரும்  தருணங்கள். எத்தகைய நேர் சந்திப்பும் கொடுத்துவிட முடியாத தருணங்கள்

தொடர்ந்து இரண்டு நாட்களாக நினைவின் நதியில் வாசித்துக்  கொண்டிருக்கிறேன். தொடர் வாசிப்பில், மெல்ல மெல்ல அலை மோதும் கரை திடீரென்று உடைப்பெடுப்பது போல உணர்ச்சி மேலிட கற்பனையில் உங்கள் கைகளைத் தொட்டு வணங்கினேன், கண்களில் மின்னும் கண்ணீருடன். உங்களை வாசிக்கும் தோறும் நாங்கள் வாழும் கணங்கள் நீட்டிக்கப்படுகின்றன........ 

நன்றி,
வள்ளியப்பன் 
சென்னை