Tuesday, November 4, 2014

வெண்முரசு விழா



அன்புள்ள ஜெ.,


வெண்முரசு விழா ஏன் என்று வாசித்தேன்

வெண்முரசு படிக்காமல் நான் தூங்கிய நாட்கள் மிகக்குறைவு… 12 மணி ஆனவுடன் பரபரப்புடன் உங்கள் தளம் வந்து வெண்முரசு வாசிப்பது ஒரு பேரின்பம்... வைரக்கல்லைக் கூழாங்கல் என்று எண்ணி ஒருவன் வீசி எறிவானென்றால், பரிதாபப்பட வேண்டியது வைரக்கல் மேலல்ல... பாரத்ததை இவ்வளவு விரிவாக ஆழமாக வாசிப்பது ஒரு வாணாள் அனுபவம்.. அதற்கு என்றும் உங்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்கள்...

நன்றி
ரத்தன்