Wednesday, January 13, 2016

போர்நிகழ்வுகள்



கடந்த இரு நாட்களாக வெய்யோன் கதை ஜேம்ஸ்பாண்ட் பட ம் 
பார்ப்பதைப்போல் மிக விறுவிறுப்பாக இருக்கிறது. ஆனால் இதை நான்  விமர்சனமாக கூறுகிறேன்.  இந்திர நீலத்திலும் இதைப்போல் ருக்மணி கடத்தல் வரும். ஆனால் அதிலிருக்கும் நம்பகத்தன்மை இதில் சற்று குறைந்திருப்பதாக கருதுகிறேன். அதில் ஒரு சிறு படையுடன் கண்ணன் செல்வான். சாத்யகி பலத்த காயமடைவான்.  என்னதான் கர்ணன் வில்லாற்றல் மிக்கவனாக இருந்தாலும் அவன் துரியோதனன் என இரண்டு பேர் மட்டும் வேற்று அரசனின் கோட்டையில் புகுந்து பெரிதாக எவ்வித யுக்தியையும் பயன்படுத்தாமல் பல நூறு வீரர்களின் தடுப்பினை உடைத்தெறிந்து தப்பித்து வருவது சற்று மிகையாகத் தோன்றுகிறது. அர்ச்சுனன் சுபத்ரை தப்பித்தலில் துவாரகையின் நகரமைப்பை திறமையாக பயன்படுத்தப்பட்டிருக்கும். நான் எதையாவது தவறவிட்டுவிட்டேனா எனத் தெரியவில்லை.  

தண்டபாணி துரைவேல்