ஜெ
கர்ணனின் போர்க்களக்காட்சியின் உச்சம் அந்த குதிரைகள் வேலியைக் கடப்பதைப்பற்றிய சித்திரிப்பதுதான் .அற்புதமான காட்சிநுணுக்கம். குதிரைகளின் பயமும் தயக்கமும் துணிச்சலும் கண்ணிலே நிற்கின்றன
குதிரை மிகவும்
சென்ஸிடிவான விலங்கு. அதற்கு மனிதர்களை நிறையவே புரியும். நான் குதிரைகளுடன் இருந்திருகிறேன்.
வேக்ஸின் எடுப்பதற்காக குதிரைகளை நாங்கள் எங்கள்லேபில் வைத்திருந்தோம். அதற்கு எல்லாமே
தெரியும். அற்புதமான ஒரு அமைதி கொண்டது. அதன் நடுக்கம் மிரட்சி எல்லாவற்றையும் அருகே
இருந்து பார்ப்பதுபோல இருந்தது அந்தக்காட்சி. அது தாவிவரும்போது அப்படியே பரவசம் ஆகிவிட்டேன்.
போர் என்று சொல்லலாம் அதை கன்னால் பார்த்து எழுதுவதற்கு ஒரு பெரிய கற்பனைவளம்தேவை
வெண்முரசின் குதிரைகளைப்பற்றியே தனியாக எழுதவேண்டும். அவற்றின் அத்தனை பழக்கவழக்கங்களும் மிகமிகநுட்பமாகச் சொல்லப்பட்டுள்ளன
சிவராம்