பிரிய ஜெ,
இன்றைய பகுதி அபாரம். துயரத்தை வெல்வதற்கு மனம் கொள்ளும் நாடகங்கள் தான் எத்தனை! http://www.jeyamohan. in/?p=2837
நலமறிதல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இக்கட்டுரை சட்டென்று நினைவுக்கு வந்தது.
ஆயுர்வேதத்தில்
மனநோய் சிகிச்சைகளுக்கு மருந்துகள், பஞ்சகர்ம சிகிச்சைகள் மட்டுமின்றி
வேறு பலவும் சொல்லப்பட்டுள்ளன. சோகம், அழுகை, காமம் குரோதம், பயம்
ஆகியவைகள் கூட சிகிச்சை முறையாக சொல்லப்பட்டுள்ளன. அவை எப்படி பலனளிக்க
கூடும் என்பதை ஊகிக்க முடிகிறது. இந்த எண்ணம் மெல்ல தனிமைபடுத்துதல்
மற்றும் பிற வன்முறை வழிமுறைகளுக்கு, அதன் ஆதார சாரமிழந்து சடங்காக
சென்றிருக்க வேண்டும்.
அன்புடன்
சுனில்