Saturday, March 21, 2015

கீதை மொழி



எதை நெஞ்சிலிருத்த மனம் தவிப்புக் கொள்கிறதே அதுவே சத்தியம். எந்த வார்த்தைகளை எழுத்தெழுத்தாக மென்று விழுங்கும் பொது மனம் விகசித்து தவித்தெழுகிறதோ அதுவே கல்வி. எதை மனம் கேள்விகளற்று உள்வாங்கிக் கொண்டு கண் நிறைக்க தடுமாறுகிறதோ அதுவே நல்லூழ் உணர்த்தும் வாழ்வு.

இந்த உணர்வுகளை நான் இந்த வரிகளில் கண்டுகொண்டேன் என்று சொன்னால் மிகையாகாது.

வெண்முரசு - நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 41 - by ஜெயமோகன்


அவனுடைய திகைத்த முகத்தை நோக்கி சிரித்தபடி “உமது வியப்பு புரிகிறது. இங்குள்ளவை அனைத்தும் நான் இயற்றுபவை என எண்ணுகிறார்கள். என் பெயர்சொல்லி செய்யப்படுபவை அனைத்திலும் நான் உள்ளேன் என்பது உண்மை. ஆனால் அச்செயல்களே நான் என்பவன் என்னை வந்தடைவதேயில்லை” என்றான் கிருஷ்ணன்

கிருத்திகா