அன்புள்ள ஜெ
பாஞ்சாலிக்கும் குந்திக்குமான குணச்சித்திர வேறுபாட்டைக்காட்டும் இரண்டு அத்தியாயங்களும் மிக அருமையானவை. ஒருத்தி அஸ்தினபுரியை கேட்கிறாள். ஒருத்தி பாரதவர்ஷத்தையே கேட்கிறாள். அந்த வேறுபாட்டின் விளைவாகவே பாரதப்போர் உருவாகிறது.
கிருஷ்ணனை இரண்டுபேரும் வைத்து விளையாடுகிறார்கள். அவன் இரண்டுபேரையும் வைத்து விளையாடுகிறான். கிருஷ்ணனின் அடங்கிய குணச்சித்திரம் அழகாக உள்ளது. ஒரேசமயம் சாமானியர்களுடன் சாமானியனாகவும் ராஜதந்திரிகள் நடுவே பெரிய ராஜதந்திரியாகவும் அவன் இருக்கிறான்.
இன்றைய அத்தியாயத்தில் வேலைக்காரர்கள் நடுவே அவன் இயல்பாக இருக்கும் காட்சி அற்புதம். குறிப்பாக ஜலஜர் என்பவரை கேலிசெய்யும் இடம். கிருஷ்ணன் ‘நண்பனாக வந்த கடவுள்’ என்பார்கள். அவன் பார்த்தனுக்கு மட்டும் அல்ல அத்தனை பேருக்குமே கடவுள்தான்
மனோ