Saturday, March 14, 2015

நூற்றுவரின் தங்கை



ஜெ சார்

துச்சளையின் கதாபாத்திரத்தை வாசித்தபோது மனநிறைவு ஏற்பட்டது. முன்னர் கேட்ட எல்லா மகாபாரதக் கதைகளிலும் அவளை கெட்டவள் என்றே சொல்லியிருந்தார்கள். என்ன கெட்டவிஷயத்தைச் செய்தாள் என்றால் கௌரவர்களின் தங்கை என்பது மட்டுமே பதிலாக இருக்கும். ஆனால் நூற்றைந்து பேர் ஆண்கள். ஒருத்திமட்டுமே பெண் என்பது ஒரு அபூர்வமான நிலை அப்படிப்பட்ட தங்கை எப்படி இருப்பாள் என்பது ஒரு பெரிய கற்பனை. அவள் தன் தமையன்களை எண்ணி எப்போதும் கவலைப்பட்டபடியேதான் இருப்பாள் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது.

அவளுடைய தோற்றம் பற்றிய வர்ணனைகளும் சிறப்பாக உள்ளன. அவளுக்கு உள்ளது திருதராஷ்டிரரின் தோற்றமும் மனசும்தான் என்று தோன்றுகிறது. அவளை பூரிசிரவஸ் பார்க்கும் இடம் நுட்பமாகவும் அழகாகவும் வந்துள்ளது

ராஜி


வண்ணக்கடல் பற்றி கேசவமணி


மழைப்பாடல் பற்றி கேசவமணி