அன்புள்ள ஜெ
வெண்முரசில் ஒரு அதிநுட்பமான அரசியல் சிக்கல் விவாதிக்கப்படும்போதெல்லாம் சம்பந்தமே இல்லாமல் வாழும் எளிய மக்களை நோக்கி கதை நகர்வதென்பது நாலைந்து முறை வந்துவிட்டது. முதலில் நினைவுக்கு வருவது பாண்டுவின் முடிசூட்டு நிகழ்ச்சிக்கு முன்னால் நடக்கும் அந்த பந்தல் அலங்கார நிகழ்ச்சி. அதுவே இப்போது மீண்டும் வந்திருக்கிறது அற்புதமான இடம் அது
ஒவ்வொரு கதாபாத்திரமும் நுட்பமாகவும் முழுமையாகவும் வந்துள்ளது. மேஸ்திரி மாதிரி ஒருவர். அவருக்கு அனுபவம் உண்டு. ஆனால் நுண்மையான மனசு மழுங்கிவிட்டது வயசு காரணமாக. அவரை கலாய்த்துக்கொண்டே இருக்கும் இளைஞர்களுக்கு அவர்மேல் அன்பும் இருக்கிறது.
ஒவ்வொருவராக வருகிறார்கள். எளிய மக்கள் தர்மன் கண்ணுக்குப்படவில்லை. அர்ஜுனனும் பார்க்கவில்லை. பலராமரும் க்ருஷ்ணரும் தான் பார்க்கிறார்கள். இரண்டுபேரும் இரண்டு வகையில் அதை அணுகுகிறார்கள்.
இந்த ஒரு அத்தியாயமே ஒரு அற்புதமான சிறுகதை
ஜெயா