Wednesday, March 18, 2015

காம்பில்ய போர்



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

மிகுந்த மனவருத்தத்தை உண்டாகியது இந்த போர்.

தோல்வியின் நாயகன் கர்ணன் இங்கே தான் செய்ய விரும்பாத விஷயத்தை, துரியன் சொல்வதால் செய்து, அதன் காரணமாக திரௌபதியின் முன் தோல்வி அடைவது, துயரத்தை தருகிறது.

இதே, அவளின் மனதில் வேறு மாதிரி அல்லவா இருந்திருக்கும். அவள் நினைத்திருப்பாள், கர்ணன் தானே போர் புரிய வந்திருப்பதாக. அதன் காரணமாகவே அவனின் தோல்வியின் விளிம்பில் தனது புடவையை பறக்க விடுகிறாள். கர்ணன் போய் அவளிடம் சொல்லவா முடியும் உண்மையை !

ஒரே விஷயம்,ஒருவரை ஒருவர் விரும்பிய ஆனால் எதிரிகளாகி போன இருவரால், இரண்டு கோணங்களில் பார்க்கபடுவது ஒரு சிறந்த திரைக்கதையை நினைவூட்டியது.

நன்றிகள் பல ஜெ.