ஜெ
இன்றைய வெண்முரசில் சாத்யகி துவாரகையை கனவாக கதையாக காணக்கூடிய இடம் ஓர் அற்புதம். அந்த அத்தியாயம் ஒரேசமயம் வானத்துக்குச் செல்கிறது. பாதாளத்திற்கும் செல்கிறது. மானுட மனதின் இரன்டு எல்லைகளையும் போய் தொட்டுவிட்டு வந்தது போல இருக்கிறது. மானுட ஆழத்துக்குச் செல்லச்செல்ல எல்லாமே சிறுத்து ஒன்றுமில்லாமல் ஆகி வானமாக ஆகிவிடுகிறது. வானத்தில் இருந்து விண்மீன் விழுகிறது. ஏராளமான அர்த்தங்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால் எதையும் மனம் சரியாக விளங்கிக்கொள்லவும் இல்லை ஒரு பெரிய அனுபவம். அதிலும் சடற்சிங்கங்கள் எழுதிய எழுத்துக்கள். கடற்கன்னிகள் வருவது எல்லாமே அழகானவை
சிவராமன்