அன்புள்ள ஜெ சார்
குந்தியிடம் கண்ணன் பேசும் இடத்தின் ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து வாசித்தேன். இருவரும் பேசிக்கொள்வது கர்ணனைப்பற்றி. இருவருக்கும் தெரியும். ஆனால் மிகமிகக் கவனமாக பேசுகிறார்கள்.கிருஷ்ணன் ஒரு விஷயத்தைச் சொன்னதுமே அதை 'சாதாரணமான' குறிப்பாக உடனே மாற்றிவிடுகிறான். குந்தி ஒன்றும் பெரியதாகச் சொல்லப்படவில்லை என்பதுபோல பாவனைசெய்கிறாள். இருவரும் நடிக்கும் நடிப்பு ஒரு மௌன உரையாடல் போல தெரிகிறது. ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள அர்த்தங்களும் நுட்பங்களும் ஃப்ளாட் ஆன கதைக்குள் எவ்வளவு விஷயங்களைச் சொல்ல முடிகிறது என்பதற்கான ஆதாரங்கள்
சித்ரா