ஜெயமோகன் சார்
சாத்யகி அடிமைமுத்திரையை விரும்பிப்பெறும் இடத்தை வாசிக்க வாசிக்க என்னவோ செய்தது. ஒரு பக்தன் ஓர் அடிமைதான் கிருஷ்ணனை அணுகமுடியும் இல்லையா? கிருஷ்ணனே அவனை அழைத்து ஆட்கொண்டு தன்னுள் வைத்திருக்கிறான். சாத்யகியின் அந்த பர்ரிபூர்ணம்மான சமர்ப்பணம் பிரமிக்கவைத்தது. வைஷ்ணவம் சொல்லும் சரணாகதியே அதுதான். ச்ரிவைஷ்ணவத்திலும் இதேபோல ஐந்து இடங்களில் சூடுபோட்டுக்கொள்ளும் ஒரு சடங்கு உண்டு என அறிந்திருப்பீர்கள். பெருமாளுக்கு அடிமைசெய்வோம் என்ற சூளுரைதான் அது
சீனிவாசன்