Monday, March 23, 2015

ஆழத்துவிழிகள்



ஜெ,

பாஞ்சாலிக்கும் கிருஷ்ணனுக்குமான உறவின் ரஹஸ்யம் என்ன என்பது மகாபாரதத்தின் மிகப்பெரிய கேள்வி. உபன்னியாசகர்கள் அதைப்பற்றி நிறையவே பேசுவார்கள். ஒரு பெண்ணுக்கு புடைவையை அளிக்க கணவனுக்கு மட்டுமே உரிமை உண்டு. அக்காரணத்தாலேயே பாஞ்சாலியின் உள்ளத்தில் கிருஷ்ணனின் இடம் அந்தரங்கமாக ஒரு காதலன் அல்லது கணவனுக்கு உரியது என்பார்கள். அது ஒருவகையிலே சரிதான். ஏனெனால் அவன் எல்லா பெண்களுக்கும் மானஸபுருஷன் தான்.

அந்த உறவை எப்படி எழுதுவீர்கள் என்ற கேள்வி இருந்தது. அவளை அடைய வந்து விட்டுச்சென்றவன். நண்பனின் மனைவி. எல்லாம் சரிதான். ஆனால் இதில் அவளை கிருஷ்ணனுக்கு இணையான போட்டியாளராக காட்டுகிறீர்கள். கிருஷ்ணையாக காட்டுகிறீர்கள். அந்த உரையாடலும் கனவை அவள் பகிர்ந்துகொள்ளும் நுட்பமும் அவன் உணரும் அவளுடைய பெண்மையும் எல்லாம் மிக அழகாக வந்துள்ளன

சுவாமி