ஜெ,
சாத்யகியை கிருஷ்ணனின் அனுமன் என்று சொல்லலாம் என்று தோன்றியது. அவன் கிருஷ்ணனுக்கே தன்னை அர்ப்பணம் செய்துகொண்டிருக்கிறான். தன் வாழ்க்கைக்கு வேறு அர்த்தமே தேவயில்லை என்று எண்ணியிருக்கிறான். ஒவ்வொரு முறையும் கிருஷ்ணனை அவன் பார்ப்பதில் உள்ள அந்த பிரமிப்பு தெரிகிறது
இது ஒரு நல்ல புனைவு உத்தி என்றும் எனக்குத்தோன்றியது. அதாவது கிருஷ்ணனை கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொள்ளும் ஒரு பக்தனின் பார்வையில் கிருஷ்ணன் வரும்போது அவருடைய ஆளுமை வெளிப்படுகிறது. அற்புதமானது அது
ராமனை அனுமனை கொண்டுதான் புரிந்துகொள்ளமுடியும் என்று உபன்னியாசகர்கள் சொல்வார்கள்.
சிவம்