Sunday, March 15, 2015

மலைகளில் வாழ்பவள்



ஜெ

இதுவரை வந்த அழகிய அரசிகளிலே எல்லாருமே ஏதோ ஒரு அரண்மனைக்குள் அடைபட்டு வெளியே போவதற்காகப்புழுங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் ஆணுக்காக ஏங்குகிறார்கள். ஆணிடம் உதவி கேட்கிறார்கள். ஆணை தன்னை விடுதலைசெய்ய வரும்படி எதிர்பார்க்கிறார்கள். ஆனால் தேவிகை ,துச்சளை, விஜயை எல்லாருமே அப்படித்தான் இருக்கிறார்கள். பிரேமை மட்டும்தான் முற்றிலும் வேறுவிதமாக இருக்கிறாள். அவள் காட்டிலே தனிமையிலே சுதந்திரமகா இருக்கிறாள். அவளுக்கு ஆணின் துணை ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அவன் போனால் திரும்பி வரவில்லை என்றாலும் பெரிய விஷயம் இல்லை. அவன் அவளுக்கு ஒரு துணைவன் மட்டும்தான்

இந்தவேறுபாட்டை காட்டியபடியே இருக்கிறது வெண்முரசு. அவள் தவிர எல்லாருமே கொந்தளிப்பாகவும் ஏங்கியபடியும்தான் இருக்கிறார்கள். என்ன பிரச்சினை என்றால் அவன் பிரேமையிடம் திரும்பிச்செல்வதைப்பற்றித்தான் நினைத்துக்கொண்டே இருக்கிறான். பிறர் அவனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. ஆச்சரியமான விஷயம்தான் இது

ஏனென்றால் அவள் மலையில் இருக்கிறாள். அங்கே அரசியல் இல்லை. அமைதி மட்டும்தான். அவள் அமைதியின் அரசி
சாரங்கன்