Friday, March 13, 2015

போரின் கணங்கள்



ஜெ,

காம்பில்யத்திற்குச் செல்லும் போரை இரண்டு அத்தியாயங்களில் விரிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு அந்தப்போரைவிட பூரிசிரவஸ் போரின்போதுகொள்ளும் உணர்ச்சிகள்தான் முக்கியமானதாகத் தோன்றியது. ஒருபக்கம் அவன் போர் செய்கிறான். மறுபக்கம் அதைப்பார்த்துக்கொண்டும் இருக்கிறான். ஒருபக்கம் அவனுக்கு கொந்தளிப்பு. மறுபக்கம் மனம் அமைதியாக இருக்கிறது

காலம் அப்படியே உறைந்து விடுகிறது. ஒவ்வொரு அணுவும் தெரிகிறது. நாமளே கூட விபத்துக்களில் இதைப்பார்த்திருப்போம். விபத்துக்களை நம்மால் அணுவணுவாகப்பார்க்கமுடியும். நுணுக்கமாக அணுக முடியும். சொல்லவும் முடியும். விபத்து நடக்கும்போதே நம்மால் அதைச் சொல்ல்லாக ஆக்கிக்கொண்டே இருக்கமுடியும்

குதிரைகள் காம்பில்யத்திற்குள் நுழையக்கூடிய அந்த ஸ்லோமோஷன் சித்திரம் கிராண்ட்! எத்தனை விரைந்தாலும் கோட்டை அங்கேயே இருக்கிறது. மொத்தமாகவேபோர் ஒரு நாலைந்துமணிநேரம்தான் நடந்திருக்கும். ஆனால் அது பெரிய ஒரு போராக இருக்கிறது

எல்லா பெரிய உச்சகட்ட நிகழ்ச்சிகளும் சீக்கிரமே நிகழ்ந்துவிடுகின்றன. நாம் நினைவில் மிகப்பெரியதாக அவற்றை மீட்டி எடுத்துக்கொள்கிறோம்

மனோ