ஜெ,
துவாரகையின் சித்தரிப்பு அற்புதமாக இருந்தது. சுருள்வடிவமான பாதைகள் கொண்ட பம்பரம்போன்ற நகரம். உச்சியில் கிருஷ்ணனின் மாளிகை. அந்த வடிவத்தை நீங்கள் எங்கிருந்து எடுத்திருப்பீர்கள் என்று புரிந்துகொண்டேன். பழையகாலத்து பரமபதங்கலிலே வைகுண்டத்தை அப்படி பம்பரம்போன்ற வடிவத்திலேதான் அமைத்திருப்பார்கள்.
துவராகை ஒரு நவீன ந்கரம் என்று காட்டியிருப்பது மேலும் அழகு. அது புரானமாக இல்லாமல் வரலாறாக இருக்கிறது. அதில் சீனர்கலும் யவனர்களும் வந்திருக்கிறார்கல். அனைவருமே அங்கே கலந்து வாழ்கிறார்கள்
துவாரகையின் வீடுகள் கிரேக்கமுறைப்படி அமைந்திருக்கின்றன. அவற்றின் இரட்டைத்தூண்களும் அந்த செருபிக் சிலைகளும் அதைத்தான் காட்டுகின்றன. ஆனால் சீனத்து வென்களிமண் கூரை போடப்பட்டவை. அற்புதமான சித்தரிப்பு
சாத்யகி மாதிரி புதியதாகச் செல்பவனின் பார்வை வழியாக சொல்லப்பட்டதனால் நாமும் அதற்குள் புதியதாகச்செல்லும் உணர்ச்சி வந்துவிட்டது
ரமேஷ் கே.ஆர்.