ஜெ,
கர்ணனுக்கும் பாஞ்சாலிக்கும் இடையே உள்ள அந்த காதலும் பொருமலும் அப்படியே விதுரன் குந்தி கதையை நினைவூட்டின. விதுரன் சூதன். குந்தி அவனை வேண்டாமென மறுத்தது அவன் நாடாளமுடியாது என்பதனால்தான். அதுதான் பாஞ்சாலியும் செய்வது. அவனும் இவனும் ஏங்கிக்கொண்டே இருக்கிறார்கல். இருவராலும் காதலையோ காதலியையோ விலகிச்செல்லமுடியவில்லை
ஆனால் குந்தி கடைசியில் ஒரு கைவிடப்பட்ட அம்மா போல விதுரன் முன்னால் உட்கார்ந்து அழுகிறாள். அதோடு குந்திமேல் விதுரனுக்கு வெற்றி வந்துவிட்டது. இவள் இப்போதும் கோபுரம் மேல் அமர்ந்து இவன் தோற்றதை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கிறாள் இல்லையா? இவளும் இதேபோல தோற்று அழக்கூடிய இடம் வரவேண்டும் என்று மனசு ஏங்குகிறது
சரவணன்